நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் உள்ள தலம் பருத்தியப்பர் கோயில். இதன் புராணப் பெயர் பரிதிநியமம். பரிதி எனப்படும் சூரியன் வழிபட்டதால் சுவாமிக்கு 'பரிதியப்பர்' என்பது திருநாமம். தற்போது இது பருத்தியப்பர் என மருவி விட்டது. இங்குள்ள அம்மன் மங்கலநாயகியை தரிசித்தால் சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்.
தேவாரப் பாடல் பெற்ற இக்கோயிலில் பங்குனி உத்திரவிழா சிறப்பாக நடக்கும். இங்குள்ள முருகனுக்கு அபிஷேக, ஆராதனை நடக்கும். கோயிலின் முன்புறத்தில் சூரிய தீர்த்தமும், பின்புறத்தில் சந்திர தீர்த்தமும் உள்ளன. பரிதியப்பர், மங்கலநாயகி, முருகன், சூரியனை வழிபடுவோருக்கு பிதுர் தோஷம், பாவம் விலகும்.