
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாளை என் சென்னியின் மேல்
நீ வைத்தால் வெம் தரணிமுதல்
கோளை வன்தீவினைப்
பேயோடு வென்று குலாவுவன் காண்
வாளை ஒப்பாம் விழியால்
நெடுமாலை மயக்கி அப்பால்
வேளை நல்கிப் பல் உலகோரும்
வாழச் செய் மின்கொடியே.
ஒளி வீசும் கொடி போன்றவளே. உயிர்களுக்கு நல்வாழ்வு தரும் மகாலட்சுமியே. நெடியவனான திருமாலை வாள் போன்ற கண்களால் மயக்குபவளே. உன் திருவடிகளை என் தலை மீது வைத்து தீவினையைப் போக்கினால் மகிழ்ச்சியுடன் வாழ்வேன்.