நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரையில் வாழ்ந்த சில புலவர்கள் ஆணவத்துடன் வாழ்ந்தார்கள். இதனால் சிரமப்பட்ட மற்ற புலவர்கள் தினமும் மதுரை சொக்கநாதரை வேண்டுவர். இவர்களுக்கு உதவ சரஸ்வதியை அவ்வையாராகவும், பிரம்மாவை திருவள்ளுவராகவும், மகாவிஷ்ணுவை இடைக்காட்டு புலவராகவும் அவதரிக்கச் செய்தார் சிவபெருமான். பிரம்மாவே திருவள்ளுவராக தோன்றினார் என்பதை உக்கிரப்பெருவழுதி என்னும் மன்னர் பாடலில் சொல்லியுள்ளார்.
அதில் வேதங்களாகிய திருக்குறளுக்கு தலை வணங்க வேண்டும், வாழ்த்த வேண்டும், அதன் கருத்துக்களை கேட்டு சிந்திக்க வேண்டும் என சொல்லியுள்ளார். இதோ அப்பாடல்...
நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன் தான்மறைந்த வள்ளுவனாய்த் தந்துரைத்த - நுால்முறையை வந்திக்க சென்னி வாய்வாழ்த்துக நன்னெஞ்சம் சிந்திக்க கேட்க செவி.