
மயிலாடுதுறையில் இருந்து திருக்கடையூர் செல்லும் சாலையில் 17 கி.மீ., தொலைவில் உள்ள தலம் ஆக்கூர். இங்கு நமசிவாய மந்திரத்தை ஜபித்து வேள்வி செய்யும் அந்தணர்கள் வாழ்ந்தனர். அவர்களில் ஒருவர் சிறப்புலியார். இந்த ஊரில் மாடக்கோயில் (யானைகள் ஏற ஏற முடியாதபடி படிகளைக் கொண்டது) ஒன்று உள்ளது.
இங்கு அருள்புரியும் சிவனை (தான்தோன்றி நாதர்) சிறப்புலியார் வழிபட்டு அன்னதானம் செய்து வந்தார். ஒருமுறை ஆயிரம் அடியார்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்தார். ஆனால் 999 அடியார்கள் மட்டுமே வந்தனர். ஒருவர் மட்டும் குறையவே, சிறப்புலியார் சிவனை வேண்டினார். ஆயிரமாவது அடியாராக வந்து சிவபெருமானே உணவு உண்டார். இதனால் 'ஆயிரத்தில் ஒருவன்' எனப் பெயர் பெற்றார்.
கார்த்திகை பூராடம் நட்சத்திரத்தன்று சிறப்புலியாரின் குருபூஜை (டிச.4., 2024) தான்தோன்றி நாதர் கோயிலில் நடக்கிறது.