
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடல்நலத்துடன் வாழ்வதற்கு ஆழ்ந்த துாக்கம் அவசியம். ஆனால் சித்தர்களில் ஒருவரான பத்திரகிரியார், 'துாங்காமல் துாங்கிச் சுகம் பெறுவது எக்காலம்' எனக் கேட்கிறார். இப்படிப்பட்ட துாக்கத்தை 'யோகநித்திரை' என்பார்கள். சிவபெருமானின் அம்சமான தட்சிணாமூர்த்தியும், ஸ்ரீரங்க நாதரும் யோக நித்திரையில் கண்மூடியபடி இருக்கின்றனர்.
அதாவது துாக்கத்தில் இருந்தாலும் விழிப்புநிலையில் அனைத்தையும் அறிவார்கள். இதை 'அறிதுயில்' என்றும் சொல்வர். அதாவது 'எல்லாம் அறிந்த நிலையில் துாங்குவது' எனப் பொருள்.