
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருமாளின் இருப்பிடமான வைகுண்டத்தில் இருக்கும் ஜீவன் முக்தர்களுக்கு 'நித்ய சூரிகள்' என்று பெயர். இவர்கள் எப்போதும் பெருமாளைத் தரிசிப்பதோடு, அவரின் பெருமைகளையும் பாடியபடி இருப்பர். பசி, துாக்கம், சுகம், துக்கம் போன்ற எந்த உணர்வுகளும் இவர்களுக்கு இருக்காது.
இங்கு செல்பவர்களை கடல் அலைகள் வணங்கும். மேகங்கள் முழங்கி வாழ்த்து சொல்லும். தேவர்கள் வரவேற்று மகிழ்வர். இங்கு கிடைக்கும் இன்பத்தை 'அந்தமில் பேரின்பம்' என்கிறார் நம்மாழ்வார். வைகுண்டத்திற்கு 'தெளிவிசும்பு திருநாடு' என்றும் பெயருண்டு. 'பிரபஞ்ச படைப்பைப் பற்றிய தெளிவைத் தரும் இடம்' என இதற்கு பொருள்.