
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூத்தவை காண முதுமணல் குன்று ஏறி
கூத்து உவந்து ஆடிக் குழலால் இசை பாடி
வாய்த்த மறையோர் வணங்க இமையவர்
ஏத்த வந்து என்னைப் புறம் புல்குவான்
எம்பிரான் என்னைப் புறம் புல்குவான்
ஆயர்பாடியில் கோபர்களும், கோபியரும் கண்டு மகிழும் விதத்தில் மணல் குன்றில் ஏறி நின்ற கண்ணன் புல்லாங்குழல் இசைத்தபடி நடனமாடினான். அவனைக் கண்ட வேதியர்களும், தேவர்களும் வணங்கினர். அத்தகைய கண்ணன் என் பின்னே வந்து முதுகைச் சேர்த்து கட்டிக் கொள்வானாக. என் தலைவன் என்னை அணைத்துக் கொள்வானாக எனப் பாடுகிறார் பெரியாழ்வார்.