ADDED : ஜூன் 26, 2025 02:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறந்தாங்கியில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள தலம் ஆவுடையார் கோயில். மாணிக்க வாசகரால் கட்டப்பட்ட கோயில் இது. தேவாரத்தில் இத்தலம் 'திருப்பெருந்துறை' எனப்படுகிறது.
திருவிளையாடல் புராணத்தில் இடம் பெறும் நரிகளைப் பரிகளாக்கிய விளையாடல் இக்கோயிலோடு தொடர்புடையது. தெற்கு நோக்கி உள்ள இக்கோயிலில் ஆத்மநாத சுவாமி, யோகாம்பாள் சன்னதியில் உருவ வழிபாடு கிடையாது. கொடிமரம், நந்தி போன்றவையும் இங்கு இல்லை. தினமும் நைவேத்யத்திற்கு புழுங்கல் அரிசி சாதம் சமைக்கப்பட்டு அதிலிருந்து வரும் ஆவியை மட்டும் சுவாமிக்கு அர்ப்பணிக்கின்றனர். அத்துடன் பாகற்காயும், கீரையும் படைக்கப்படுகிறது.