
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கேரளாவில் திருவோணத்தன்று வீட்டு வாசலில் மகாபலி மன்னரை வரவேற்க வண்ணமலர் கோலங்கள் வரைவர். கோலத்தின் நடுவில் விளக்கேற்றி வைத்து, அதனைச் சுற்றி காய், கனிகளை அடுக்குவர். இதை 'அத்தப்பூக் கோலம்' என்பர்.
புத்தாடை அணிந்து பலவித உணவு வகைகளை விருந்தினர்களுக்கு கொடுப்பர். எர்ணாகுளம் அருகிலுள்ள திருக்காக்கரை வாமனர் கோயிலிலும், மற்ற கோயில்களிலும் ஓணவழிபாடு நடக்கும். திருவிழாவின் ஒரு பகுதியாகப் 'வேலக்களி' என்னும் வீர விளையாட்டு, ஓணப்பந்து, படகுப் போட்டி நடக்கும்.