
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பக்தி என்ன செய்யாது (பக்தி கிம் நகரோதி) என்கிறார் ஆதிசங்கரர். அதாவது பக்தி எல்லாம் செய்யும் என்பதையே இப்படி குறிப்பிடுகிறார். வாழ்வில் முக்கியமான விஷயம் பக்தி. கடவுள் எங்கு இருக்கிறார், நாம் எப்படி வழிபடுகிறோம், அவருக்கு உருவம் உண்டா இல்லையா என்பதெல்லாம் முக்கியம் அல்ல. பக்தியில் ஈடுபட்டால் நம்பிக்கை அதிகரிக்கும். நாளை என்ன நடக்கும் என்பது தெரியாத நிலையில் நம்பிக்கைதான் நமக்கு ஊன்றுகோல். பக்தி சுகமான விஷயம். மனதை பண்படுத்துவது, வாழ்வு குறித்த ரசனையை, எதிர்பார்ப்பை, நம்பிக்கையை பலப்படுத்துவது பக்தி. ஆதலினால் பக்தி செய்வீர்.