
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பகவான் சத்யசாய் பாபா தன் பிறந்த நாள் பற்றி, ''என் பிறந்த நாளை அனைவரும் கொண்டாடுகிறீர்கள்.
இப்படி நல்ல மனம் கொண்ட நீங்கள் கூடுவதால் நன்மை கிடைக்கிறது. ஆனால் நானோ குறிப்பிட்ட மாதம், தேதியை பிறந்த நாளாகக் கொண்டாட விரும்பவில்லை. உங்கள் இதயத்தில் தெய்வீகம் மலரும் நாளையே, நான் பிறந்த நாளாகக் கருதுகிறேன். அதாவது என் அறிவுரையை பின்பற்றி நீங்கள் நல்ல செயல்களை செய்யும் போதெல்லாம் நான் பிறக்கிறேன்.
என் பிறந்த நாளில் ஏழைகளுக்கு உதவுங்கள். சமுதாயம் முன்னேறப் பாடுபடுங்கள். பிறரிடம் அன்பு காட்டினால் அதுவே பக்தியாகும். அப்போதுதான் நான் மகிழ்ச்சி அடைவேன்'' என்கிறார்.

