
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கடத்தை நீக்கி வெற்றியைத் தருபவர் கணபதி. எந்தவொரு செயலை தொடங்குவதற்கு முன்பாகவும் அவரை வணங்குங்கள். அச்செயலை முடிப்பதற்குரிய ஆற்றலை அவர் தருவார். காட்டில் யானைதான் பெரிய மிருகம். புத்திசாலித்தனம், ஞாபக சக்தி மிகுந்த அது தடைகளை முறியடித்து தன் பாதையில் முன்னேறிச் செல்லும்.
அதைப் போல யானைமுகம் கொண்ட கணபதியை வணங்கினால் ஞாபகசக்தி, புத்திசாலித்தனம் அதிகரிக்கும். முயற்சியில் வெற்றியும் கிடைக்கும் என்கிறார் பகவான் சத்ய சாய்பாபா.

