ADDED : ஜன 19, 2024 01:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முருகனுக்குப் படைக்கும் பொருள்களைத் தோளில் சுமந்து ஆடி பாடி நேர்த்திக் கடனைச் செலுத்துவது காவடி ஆகும். இதை முதலில் செயல்படுத்தியவர் முருகனின் அடியவரான இடும்பன். இவர் தன் தோளில் இரு பக்கமும் இருமலைகளைக் கட்டிச் சுமந்து வந்து வழிபட்டார்.
இக்காவடியாட்டத்தை பற்றிய குறிப்பு சங்க இலக்கியத்திலும் உள்ளது.
புறநானுாற்றில் மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும் போது தங்களுடைய பொருள்களை ஒரு தண்டின் இரு முனைகளிலும் கட்டிச் சென்றுள்ளனர். இதை 'காவினெம் கலனே சுருக்கினெம் கலப்பை' என்கிறது. இப்படி காவடியில் பொருட்களை கொண்டு சென்றவர் அவ்வையார். இதில் 'கா' என்னும் சொல் இரு முனைகளிலும் எடைகளைக் கட்டித் தொங்கவிடப்பட்ட தண்டினைத் தோளில் சுமத்தல் என்னும் பொருளில் வந்துள்ளது.