நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமன் காட்டுக்கு கிளம்பிய போது லட்சுமணனும் உடன் வருவதாக தெரிவித்தான். ஆனால் ராமன் அதற்கு சம்மதிக்கவில்லை.
மகாலட்சுமியின் அம்சமான சீதையும் காட்டுக்கு வருவேன் என அடம் பிடித்தாள். இது தான் சமயம் என கருதி லட்சுமணனும், ''அண்ணா! நானும் காட்டுக்கு உங்களுடன் வருகிறேன்'' என சொல்ல அதற்கு ராமன் சம்மதித்தான். தஞ்சம் என வந்தவர்களை தாயாரின் மனம் ஏற்க மறுப்பதில்லை. இதன் அடிப்படையில் கோயில்களில் பெருமாள் சன்னதிக்குச் செல்லும் முன் தாயாரை வணங்குகிறோம். பெருமாளின் அருளைப் பெற தாயாரைச் சரணடைந்தால் போதும் என்ற ரகசியத்தை இதன் மூலம் உணரலாம்.