நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி மலைக்கோயில் முருகனுக்கு, ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் உச்சிகாலத்தில் (மதியம்) அன்னாபிஷேகம் செய்யப்படும். ஆனி மூல நட்சத்திரத்தில் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதருக்கு சாயரட்சை (மாலை) பூஜையில் அன்னாபிஷேகம் உண்டு. அடுத்த நாளான பூராடம் நட்சத்திரத்தில் பெரியநாயகி கோயிலிலும், உத்திராடம் நட்சத்திரத்தில் பெரியாவுடையார் கோயிலிலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படும்.