ADDED : ஆக 05, 2016 09:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சர்ப்ப தோஷம் நீங்க நாகசதுர்த்தி விரதம் இருப்பவர்கள் அதிகாலையே எழுந்து நீராடி அருகிலுள்ள மாரியம்மன் அல்லது சிவாலயங்களிலுள்ள துர்க்கை சன்னிதிக்கு செல்ல வேண்டும். புற்று அல்லது அரசமரத்தை சுற்றி நாகர் உள்ள கோவில்களாக இருந்தால் நல்லது. அங்குள்ள நாகர்களுக்கு பாலபிஷேகத்தை விரதம் இருப்பவர் கையாலேயே செய்யலாம்.
மாரியம்மனுக்கும் பாலபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பு. அன்று காலையில் பழம், பால் சாப்பிடலாம். மதியம் மோர் மட்டும் சேர்த்த பச்சரிசி சாதம் சாப்பிட வேண்டும். இரவில் எளிய உணவு எடுக்கலாம். அன்று மாலையில் விளக்கேற்றி மாரியம்மன் மற்றும் துர்க்கைக்குரிய பாடல்களைப் பாட வேண்டும் அல்லது கேட்க வேண்டும். இந்த விரதத்தால் சர்ப்ப கிரகங்கள் மகிழ்ந்து நம்மை பாதுகாக்கும்.