ADDED : ஆக 05, 2016 09:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிலருக்கு ஜாதகத்தில் ராகு எட்டாம் இடத்தில் இருக்கும். இவர்களுக்கு திருமணம் தள்ளிப்போதல், தொழில் தடை என இருக்கும். ராகு எட்டில் இருக்கும் போது கேது 2ல் இருக்கும். இவர்களுக்கு பணவரவில் தடை இருக்கும் என்பது பொதுவிதி. குறிப்பாக ராகு திசை காலத்தில் இவர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படலாம். இதற்கான பரிகாரமாக அமைவது நாகசதுர்த்தி விரதம். இவர்கள் மாரியம்மன், துர்க்கையை வழிபட வேண்டும். ஆடி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று இவர்கள் நாகசதுர்த்தி விரதம் இருக்க வேண்டும். ஆனால், சம்பந்தப்பட்டவர் மட்டும் இந்த விரதத்தை அனுஷ்டித்தால் பலன் குறைவே. குடும்பத்தில் எல்லோரும் இணைந்து இருந்தால் நன்மை பல மடங்காக இருக்கும்.