ADDED : ஆக 26, 2014 04:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரு செயலை ஆரம்பிக்கும் முன்பு, விநாயகரை வணங்கி அவருடைய அனுக்ரகத்தைக் கோருகிறோம். அவர் விக்னங்களை (தடை) அகற்றுபவர். குழந்தை முதல் முதியோர் வரை அவரை வணங்கி எல்லா இடையூறுகளையும் களைய பிரார்த்திக்கின்றனர். அவரை எந்த உருவத்திலும் வழிபடலாம். மாணவர்களுக்கு படிப்பில் ஏற்படும் தடைகளை விநாயகர் அகற்றுகிறார். விநாயகரை மாணவர்கள் தினமும் பிரார்த்திக்க வேண்டும். வித்யை (கல்வி உள்ளிட்ட கலைகள்) அளிக்கும் அவரை 'வித்யா கணபதி' என்கிறோம். எந்தப் பிள்ளையாரை வணங்கினாலும், 'வித்யா கணபதியே! இன்று படிக்கும் பாடங்கள் என் மனதில் நன்றாகப் பதியட்டும். பிற கலைகளிலும் என்னை ஒளிர வைக்க என்னுடன் துணை வர வேண்டும்,'' என்று வேண்டுங்கள். வித்யா கணபதி, எல்லாக் கலைகளிலும் உங்களை வல்லவர் ஆக்குவார்.