ADDED : ஆக 26, 2014 04:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விநாயகர் முழு முதற்கடவுள். அவரே சங்கடங்களையும் தடைகளையும் நீக்க வல்லவர். அவரை வணங்கிய பின்னரே எந்த நல்ல செயல்பாட்டையும் தொடங்க வேண்டும். இதன்மூலம் அந்தச் செயலைச் செய்வதற்குரிய வல்லமை, மனோதிடம் உண்டாகும். காட்டில் யானை தான் மிகப் பெரிய விலங்கு. புத்திசாலித்தனமும், ஞாபக சக்தியும் கொண்ட யானை எந்த தடையையும் கடந்து சாதனை புரியும் தன்மை கொண்டது. யானை முகத்தவனாகிய விநாயகப் பெருமானும், தன்னைச் சரணடைந்தவர்களுக்கு நல்ல புத்தியை வழங்குவதோடு, எங்கும் எதிலும் வெற்றியை வழங்கி அருள்புரிகிறார்.