ADDED : ஜன 26, 2022 05:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி அருகிலுள்ள கீரனுார் சிவலோகநாதர் கோயிலிலுள்ள சிவன் தவறு செய்தவர்களுக்கு மன்னிப்பு வழங்குகிறார். இதற்கான காரணம் கோயிலின் தலவரலாற்றில் உள்ளது.
தட்சன் சிவனுக்கு எதிராக யாகம் நடத்தினார். அதில் பங்கேற்ற அக்னிதேவன் வேள்வி குண்டத்தில் இடப்படும் பொருட்களை கொண்டு சென்று அசுரர்களுக்கு கொடுத்தார். இதனால் கோபம் கொண்ட சிவன் அக்னிதேவனைக் கிளியாக மாறும்படி சபித்தார். கிளிவடிவம் எடுத்த அக்னி இக்கோயிலில் சிவபெருமானை வழிபட்டு மன்னிப்பு கோரினார். அவரை மன்னித்ததோடு இயல்பான உருவத்தையும் கொடுத்தார். அறியாமல் செய்த தவறுக்கு வருந்துபவர்கள் சிவலோகநாதரை வழிபட்டால் விமோசனம் கிடைக்கும்.

