
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பார்வதி தனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என்று விரும்பிய காத்யாயன மகரிஷி தவம் புரிந்தார். பார்வதியும் அவரது மகளாகப் பிறந்தாள். இதனால் 'காத்யாயனி' என பெயர் பெற்றாள். அவள் குழந்தையாக பிறந்ததில் விசேஷ தத்துவம் இருக்கிறது. குழந்தையின் மனதில் எந்த உணர்ச்சியும் தங்கியிருக்காது. சிரிப்பு, கோபம், அழுகை, அடம் என்று எல்லாம் அந்தந்த நேரத்தோடு பறந்தோடி விடும். அதுபோல, மனிதன் வளர்ந்த பிறகும் கூட, தனக்குள் இயற்கையாக ஏற்படும் இத்தகைய குணங்களை அந்தந்த சமயத்திலேயே மறந்து விட வேண்டும் என்று உணர்த்தவே பூமிக்கு குழந்தையாக வந்தாள். நவராத்திரி காலத்தில், அவளை வழிபட்டால் நமக்கும் குழந்தை மனம் ஏற்படும்.

