ADDED : மார் 31, 2017 01:57 PM
ரிஷபம், துலாம் ராசியினருக்கு ரூ.14,000 வரவு என்றால் ரூ.11,000 செலவு வரும். அதாவது இவர்களுக்கு ரூ.3,000 சேமிப்பாகும். மிதுனம், கன்னி ராசியினருக்கு ரூ.2,000 வரவு என்றால் ரூ.11,000 செலவு வரும். இதே போல மற்ற ராசியினர் தங்கள் வரவு, செலவை கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். குறைந்த வரவு உள்ளவர்கள் செலவை சரிகட்ட கடன் வாங்க வேண்டி வரலாம்.
மகரம், கும்பம் ராசியினருக்கு ரூ.11,000 வரவு என்றால், செலவு ரூ.5,000 மட்டுமே. இவர்கள் தான் சேமிப்பில் “டாப்பில் இருப்பார்கள். மேஷம், விருச்சிகம்
ராசியினருக்கு வரவும், செலவும் சரியாக இருக்கும்.
உடல் நலம் விஷயத்தில் ரிஷபம், துலாம் ராசியினர் 5 பங்கு நல்ல உடல்நலமும், 2 பங்கு நோயும் அடைய வாய்ப்புண்டு.
இவர்களுக்கு மருத்துவ செலவு குறைவாக இருக்கும். மிதுனம், கன்னி, மகரம், கும்பம் ராசியினருக்கு மருத்துவ செலவு கூடும்.
குடும்ப, வேலை விஷயங்களில் சுகம், சிரமத்தை எல்லா ராசியினருமே சம அளவில் அனுபவிப்பர்.

