ADDED : ஜூலை 31, 2021 03:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உதிரிப்பூக்களை சுவாமியின் பாதத்தில் இட்டு அர்ச்சனை செய்யும் போது அஷ்டோத்திர நாமம் (108) அல்லது சகஸ்ர நாமங்களை (1008) சொல்வது சிறப்பு. நாமம் ஒன்றைச் சொல்லி பூக்களை கையில் எடுக்கும் போது கட்டை விரல், நடுவிரல், மோதிர விரல்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். ஆள்காட்டி விரல், சுண்டுவிரல் நீட்டிய நிலையில் இருக்க வேண்டும். பழைய பூக்களை அகற்றும் போது ஆள்காட்டி, கட்டை விரலை பயன்படுத்த வேண்டும்.