sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

மனதில் உறுதி வேண்டும்!

/

மனதில் உறுதி வேண்டும்!

மனதில் உறுதி வேண்டும்!

மனதில் உறுதி வேண்டும்!


ADDED : செப் 04, 2011 09:09 AM

Google News

ADDED : செப் 04, 2011 09:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எங்கும் அறிவுமயமாக கடவுள் நிறைந்திருக்கிறார். அந்த அறிவுக்கடலில் நாம் ஒரு திவலையைப் போல இருக்கிறோம். அந்த அறிவை ஆணவம் என்னும் மாசு மூடியிருக்கிறது. அதை நீக்கிவிட்டால் தெய்வசக்தியும் ஞானமும் நமக்கு ஏற்பட்டு விடும்.

* வறுமையை எண்ணி சிலர் பயப்படுகின்றனர். எண்ணியது நடக்குமோ நடக்காதோ என்றும் பயப்படுவோரும் உண்டு. எல்லாக் கவலைக்கும் அச்சமே காரணமாக இருக்கிறது. நம் உச்சந்தலையில் வானம் இடிந்து வீழ்ந்தாலும் கூட அச்சப்படக்கூடாது.

* மனதை உற்சாக நிலையில் வைத்துக் கொண்டால் உடம்பிலே தீவிரமுண்டாகும். உடம்பைத் தீவிரமாக்கி விட்டால் மனம் உற்சாக நிலையில் இருக்கும். இப்படி மனமும், உடலும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கிறது.

* சத்தியம். பரம்பொருளைக் காட்டும் கண்ணாடியாகும். அதனால், பேச்சில் உண்மை வெளிப்பட வேண்டும் என்ற உறுதி வேண்டும். உள்ளத்தில் உண்மை இருந்தால் அது நம் வாக்கிலும் வெளிப்படும்.

பாரதியார்
(நாளை பாரதியார் நினைவுதினம்)



Trending





      Dinamalar
      Follow us