
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* அறிவுத் தெளிவுடன் தொழிலில் ஈடுபட்டால் நன்மை உண்டாகும்.
* யாருக்கும் எதற்கும் அடிமையாகாதீர்கள். பூரணனான கடவுள் ஒருவருக்கே அடிமையாக வாழுங்கள்.
*சொல்லுக்கு மகத்துவம் இல்லை. அதுவே உள்ளத் துணிவுடன் சொல்லும்போது சக்தி படைத்ததாகி விடும்.
* தன் குற்றத்தை சுண்டைக்காயாகவும், மற்றவர் குற்றத்தை பூசணிக்காயாகவும் பார்ப்பது கூடாது.
* எந்த செயலுக்கும் காலம் ஒத்துழைக்காவிட்டால், அதனை நிறைவேற்றுதல் என்பது சாத்தியமாகாது.
-பாரதியார்