
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பிறர் குற்றங்களை மன்னிக்கும் குணம், பெரியவர்களிடம் மட்டுமே இருக்கும்.
* பழி வாங்கும் எண்ணத்துடன், தண்டனை தரும் அதிகாரம் யாருக்கும் இல்லை.
* தனக்காகவும், தன் குடும்பத்திற்காகவும் பயனுள்ளதை செய்வதே உழைப்பு.
* உழைப்பதில் சுகமிருக்கிறது. வறுமை, நோய் போன்ற பேய்கள் உழைப்பைக் கண்டால் ஓடி விடும்.
* ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்கு உதவாது. நடைமுறைக்கு வராத கருத்தை, அறிவு என்று சொல்லக்கூடாது.
* கால மாற்றத்திற்கு ஏற்றாற் போல, எல்லா விஷயத்திலும் மாறுதல் வந்து கொண்டே இருக்கும்.
-பாரதியார்