ADDED : நவ 30, 2016 03:11 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மற்றவர்களுக்கும், நமக்கும் இன்பம் அளிக்கும் நற்செயல்கள் அனைத்துமே புண்ணியமானவை தான். அவற்றைத் தேர்ந்தெடுத்து செய்யுங்கள்.
* அன்புள்ளவனிடம் பொறுமை மிக மிக அதிகமாக இருக்கும்.
* கடவுள் ஒருவர் என்பதே உண்மை. ஆனால், அவரை மனிதர்கள் ஆயிரமாயிரம் முறைகளில் வழிபடுகிறார்கள்.
* புத்தியை மீறாத வகையில், மனதை அடக்கி வைக்க வேண்டும்.
- பாரதியார்