
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உழைப்பிலே சுகம் இருக்கிறது. வறுமை, நோய் போன்ற குட்டிப் பேய்கள் உழைப்பைக் கண்டால் ஓடி விடும்.
* உன் கட்டுப்பாட்டில் உன் உடம்பு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நீ மிருகமாகி விடுவாய்.
* சுயநலத்தை விடு. தெய்வத்தை பூரணமாக நம்பு. உண்மையை மட்டும் பேசு. நியாயத்தைப் பின்பற்று.
* வாழ்வில் வெற்றி பெற விரும்பினால், பொறுமை என்னும் உயர்ந்த குணத்தை வளர்த்துக் கொள்.
* நடைமுறைக்கு ஒத்து வராத விஷயத்தை ஞானம் என்று சொல்வது பிழை.
பாரதியார்