ADDED : செப் 25, 2014 01:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கோபம் என்னும் இருள் மனதைச் சூழ்ந்து கொண்டால் எந்த செயலையும் சரிவர செய்ய முடியாது.
* தர்மத்தை சூது கவ்வும். ஆனால், தர்மம் மறுபடியும் வென்றே தீரும்.
* எப்போதும் மலர்ந்த முகம், இனிய சொல், தெளிந்த உள்ளத்துடன் இருக்கப் பழகுங்கள்.
* அச்சம் இருக்கும் வரையில் நீ அறிவாளியாக முடியாது. அச்சமின்மையே அறிவு.
* மற்றவர் உள்ளத்தில் பொய்யான மதிப்பு உண்டாக இடம் கொடுக்காதீர்கள்.
* கல்வி, தவம் இரண்டிலும் எந்த வயதிலும் ஈடுபடலாம்.
- பாரதியார்