
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஏழையாக வாழ்பவன் ஒரே நாளில் செல்வந்தனாக முடியாது. உழைப்பால் மட்டுமே உயர முடியும்.
* பேச்சளவில் அன்பு என்பதால் யாருக்கும் பயனில்லை. செயலில் வெளிப்படுவதே உண்மையான அன்பு.
* நெருக்கடி சமயத்தில் துணிவுடன் செயல்படுபவனே அறிவாளி. அவன் எழுதப் படிக்கத் தெரியாத முட்டாளாக இருந்தாலும் உயர்ந்தவனே.
* அச்சத்தை வேரோடு அறுத்து விடுங்கள். உச்சி மீது வானமே விழுந்தாலும் பயப்படாதீர்.
* வாழ்வில் பெரிய துன்பத்தை அனுபவித்த பிறகே, உண்மை கண்ணுக்குப் புலப்படுகிறது.
-பாரதியார்