sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

பொறுமையாக பணி செய்

/

பொறுமையாக பணி செய்

பொறுமையாக பணி செய்

பொறுமையாக பணி செய்


ADDED : மே 29, 2010 04:05 PM

Google News

ADDED : மே 29, 2010 04:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சம்பிரதாயம் என்பதால் மட்டுமே ஒன்றை பொய்யென்று எண்ணி விடக்கூடாது. புதியதென்பதால் மட்டுமே ஒன்றை உண்மையென்றும் நம்பி விடக்கூடாது. பிழைகளை ஆராய்ந்து எது உண்மை, எது பொய் என்ற விஷயஞானத்தோடு அணுகுவதே சிறந்தது.

* அசைக்க முடியாத பொறுமையுடன் பணிகளைச் செய்தால், சிரமங்கள் சிறிதும் நம்மைத் தீண்டாது. அதில் உறுதியான வெற்றியும் உண்டாகும். ஆர்வத்தோடு கடமையைச் செய்யும்போது, உடம்பிலும் உள்ளத்திலும் வலிமையும் ஒளியும் உண்டாகும்.

* இவ்வுலகத்தை துன்பம் என்று எண்ணினால் காண்பதெல்லாம் துன்பமாகவே தான் இருக்கும். தன்னைத் தானே, மனதினால் துன்புறுத்திக் கொள்வது தான் உலகில் பெரிய மடத்தனம்.

* கடவுளை வழிபடுவது, வழிபடாமல் இருப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. பிறரை ஏமாற்றுவதையும், பழிப்பதையும் நிறுத்துங்கள். நிச்சயம் கடவுளின் அருளுக்கு பாத்திரமாவீர்கள்.

* ஒருவன் செய்த தீவினைகளின் பயனை அனுபவித்துத் தான் ஆகவேண்டும். இப்பிறவியிலேயே அதன் பயன் நம்மை விடுவதில்லை. இன்பத்தை விரும்புபவர்கள் பிறருக்கு தீங்கு எண்ணாதிருப்பது ஒன்றே வழி.

-பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us