
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* செல்வம், புகழ், பதவி என எவ்வளவு மேன்மை பெற்றிருந்தாலும் பகுத்தறிவு இல்லாவிட்டால் மனிதன் அழிந்து போவான்.
* புல்லுருவி மரத்திற்கு எதிரி. விரோத உணர்வு மனித குலத்திற்கு எதிரி. விரோதம் இல்லாத மனிதன் எந்தச் செயல் செய்தாலும் அது வெற்றி பெறும்.
* நம்பிக்கைக்கு உரியவரே நல்ல உறவினர். நோயற்ற வாழ்வே பெரும் பாக்கியம். திருப்தியே பெரிய செல்வம்.
* பயனில்லாத சொற்களைப் பேசுபவன், வாசனை இல்லாத மலருக்கு சமமானவன். மனதில் நினைப்பதையே சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் மவுனமாக இருப்பதே மேல்.
* ஆயிரம் வீண் வார்த்தைகளைப் பேசுவதை விட மனதிற்கு இதம் அளிக்கும் ஒரு நல்ல வார்த்தை மேலானது.
- புத்தர்