/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
புத்தர்
/
பிரார்த்தனைகளில் மிக உயர்ந்தது பொறுமை
/
பிரார்த்தனைகளில் மிக உயர்ந்தது பொறுமை
ADDED : பிப் 09, 2024 11:02 AM

* வெற்றி பகையை உருவாக்கும். தோல்வி வருத்தம் தரும். இவை இல்லாத மனதிலே அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும்.
* சுகபோகங்களில் இருந்து சோகம் பிறக்கிறது.
* பிரார்த்தனைகளில் மிக உயர்ந்தது பொறுமை.
* உனது விடுதலை பிறரிடம் இல்லை. உன்னிடமே உள்ளது.
* அமைதியை விட மேலான ஆனந்தம் வேறில்லை.
* நீ துன்பப்பட்டாலும் பிறருக்கு தீமை செய்யாதே.
* நன்மை, தீமை இரண்டையும் சீர்துாக்கி முடிவு செய்பவனே ஞானி.
* ஒருவன் உனக்கு கெடுதல் செய்கிறான் என்றால் உன்னிடம் ஏதோ தவறு உள்ளது என அர்த்தம். அதை திருத்திக்கொள்.
* பஞ்சில் படியும் தீப்பொறியை விட மனதில் படியும் வெறுப்பு வேகமாகப் பரவும்.
* நீ செய்யும் செயல்கள் உன்னை நிழல் போல தொடரும்.
* பிறரது குற்றம் எளிதில் உனக்கு தெரியும். ஆனால் உன்னிடம் உள்ள குற்றத்தை நீ பார்க்க மாட்டாய்.
* ஆசைகளுக்கு சமமான நெருப்பு வேறில்லை.
* பயன் இல்லாத சொற்களை பேசுபவன் வாசனை இல்லாத மலருக்கு ஒப்பானவன்.
* தொடர்ந்து கடைபிடிக்கும் பொறுமையே உயர்ந்த தவம்.
* கோபத்தில் வரும் வார்த்தை கூரிய வாளுக்கு சமம்.
சொல்கிறார் புத்தர்