sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சின்மயானந்தர்

/

கடமையை இன்றே செய்யுங்கள்

/

கடமையை இன்றே செய்யுங்கள்

கடமையை இன்றே செய்யுங்கள்

கடமையை இன்றே செய்யுங்கள்


ADDED : மே 03, 2011 09:05 AM

Google News

ADDED : மே 03, 2011 09:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சுத்தமான, பயமற்ற, கபடமற்ற, குற்றமற்ற, பகைமையற்ற எண்ணங்களை மனதில் கொள்பவன் தெய்வத்தன்மையுடன் விளங்குவான்.

* உலகத்தார் வியக்கும் வண்ணம் ஒருவனுக்கு எதிர்பார்க்க முடியாத பயன் கிடைக்க தெய்வபக்தி அவசியம்.

* எந்த செயலையும் நாளை, நாளை என்று கடத்தாமல், இன்றே செய்தால் அது நன்றாக முடியும்.

* உண்மையான பக்தியிருந்தால் தைரியம் உண்டாகும். தைரியம் இருந்தால் உண்மையான தெய்வ பக்தி உண்டாகும். தைரியத்தால் ஒருவன் இந்த பிறவியிலேயே தெய்வநிலையை பெறுவான்.

* கைத்தொழிலால் செல்வம் விளைகிறது. அறிவுத் தொழிலால் அது சேகரிக்கப்படுகிறது,

* நாக்கைக் கட்டுதல், பிரமச்சரியம் இவற்றை பணக்காரர்கள் கடைப்பிடித்தால் நன்மையுண்டாகும். ஏழைகளுக்கு இந்த உபதேசம் அவசியமில்லை, காரணம், நாக்கு அவர்களுக்கு ஏற்கனவே கட்டித்தான் வைக்கப்பட்டுள்ளது.

* குழந்தை தாயை நம்புவது போலவும், மனைவி கணவனை நம்புவது போலவும், பார்ப்பதைக் கண் நம்புவது போலவும் தெய்வத்தை நம்ப வேண்டும்.

-பாரதியார்

08.05.2011

முழுமனதுடன் பணி செய்யுங்கள்

* எண்ணம், சொல், செயல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கங்களை நடுநிலையில் நின்று மதிப்பிடும் பழக்கம் தெய்வீக வாழ்வின் முதல்படி.

* மனம், புத்தி இவற்றின் குணத்தையும், தரத்தையும் பொறுத்தே ஒரு மனிதனின் தன்மை தீர்மானிக்கப்படுகிறது.

* உற்சாகம் குறையாமல், அச்சத்துக்கு இடம் தராமல், தடைகளைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தன்னம்பிக்கையுடன் முயற்சிகளில் ஈடுபட்டு முன்னேறுங்கள். தடைகள் யாவும் நிழல்போல் மறைவதுடன், கடவுளின் அருள் கிடைக்கும்.

* எந்தசெயலை செய்யும் போதும், வெறும் உடல் உழைப்பு மட்டும் இருக்கக்கூடாது. மூளையும் மனமும் அதில் ஈடுபட வேண்டும்.

* உடலை பலப்படுத்தும் சக்தியையும், அறிவைக் கூர்மைப்படுத்தும் சிந்தனை ஆற்றலையும் இறைவன் நமக்கு செல்வமாக அளித்துள்ளான்.

* இறைவனிடம் நாம் கொள்ளும் பக்தியும், முறைப்படி செலுத்துவதற்காக செய்யும் விரதங்களும் தான் நம்மைத் தூய்மைப்படுத்துகின்றன.

- சின்மயானந்தர்
(இன்று சின்மயானந்தர் பிறந்தநாள்)



Trending





      Dinamalar
      Follow us