
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பிறரோடு நம்மை ஒப்பிடுவதன் மூலம் மனதில் போட்டி எண்ணம் உருவாகிறது. இதனால் மனஅமைதி போய்விடுகிறது.
* கண்டவரிடமும் கஷ்டத்தைச் சொல்லி வருந்துவதை விட, கடவுளிடம் சொல்லி முறையிடுவதே நல்லது.
* ஆசையைக் குறைக்கப் பழகி விட்டால் மனிதன் மீண்டும் பிறவியில் சிக்கி சிரமப்படத் தேவையில்லை.
* அன்றாடம் தியானம் செய்யுங்கள். குடும்பத்திலுள்ள மற்றவர்களையும் ஊக்கப்படுத்துங்கள்.
* குறைகளைப் பெரிதுபடுத்த வேண்டாம். மற்றவர்களிடம் உள்ள நல்லதை மட்டும் காணுங்கள்.
- காஞ்சிப்பெரியவர்