sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

மாதா அமிர்தனந்தமயி

/

பிறர் தவறைப் பொறுப்போமே!

/

பிறர் தவறைப் பொறுப்போமே!

பிறர் தவறைப் பொறுப்போமே!

பிறர் தவறைப் பொறுப்போமே!


ADDED : பிப் 21, 2012 10:02 AM

Google News

ADDED : பிப் 21, 2012 10:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நாம் எச்செயலை செய்தாலும் இறைவனுக்கு அர்ப்பணம் என்ற உணர்வோடு செய்தால், விதிப்பயன் நம்மைப் பாதிப்பதில்லை.

* வசந்தம், வேனில், இலையுதிர், மழை, குளிர், பனி என காலங்கள் சுழற்சி அடிப்படையில் வருகின்றன. இறைவனின் அமைப்பில் எந்த ஒரு நிகழ்வும் நியதிப்படியே நடக்கிறது.

* கால் தடுக்கி விழுந்த ஒருவன், தனக்கு சரியாக வழிகாட்டவில்லையே என்று தன் கண்களின் மீது கோபித்து, அதை பறிக்கமாட்டான். ஒருவன் தன் கண் செய்த குற்றத்தைப் பொறுத்துக் கொள்வது போல், பிறர் செய்த தவறையும் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

* மன அமைதியை இழக்க காரணம் எங்கு சென்றாலும் குற்றம் குறைகளை காண்பது தான். இந்த குணத்தை மாற்றி, நல்ல விஷயங்களை மட்டுமே சிந்திக்கும் உயர்ந்த மனோபாவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

* பணமே வேண்டாம் என்று சொல்லவில்லை. நம்மிடம் இருக்கும் பணத்தின் மதிப்பையும், பயனையும் புரிந்து கொண்டால் இன்பமும் அமைதியும் பெறலாம்.

- மாதா அமிர்தானந்தமயி



Trending





      Dinamalar
      Follow us