
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பிறப்பினால் உயர்வு, தாழ்வு கருதுவது கடவுளுக்கு எதிரானது.
* தேவைக்கு அதிகமாகப் பொருள் தேடுவதும், திருட்டுக்குச் சமமானது.
* கடமையைச் சரிவர நிறைவேற்றினால், உரிமை தானாகவே வந்து சேரும்.
* கடவுள் உண்மை என்று கூறுவதை விட, உண்மையே கடவுள் என்பதே சிறந்தது.
* தியாக மனப்பான்மையுடன் இருப்பவன், தனக்காக எதையும் தேட விரும்ப மாட்டான்.
* ஏளனம் என்பது பேசுபவனை இழிவுபடுத்துமே அல்லாமல், ஏசப்பட்டவனை இழிவுபடுத்தாது.
- காந்திஜி