
பொறுமையாக இருந்தால் நன்மைகள் உண்டு. * இறைவன் கூறுகிறான்: அந்தச் சமூகத்தவரில் சிலரை நாம் உண்டாக்கினோம். அவர்கள் பொறுமையை மேற்கொண்டு எமது கட்டளைக்கு அடிபணிந்து நேர்வழி அடைந்தார்கள். * இஸ்ரவேலர்கள் பொறுமையைக் கடைபிடித்ததால் நன்மை கிடைத்தது. * இந்த வழியில் நடப்போருக்கு அவர்கள் செய்ததைவிட அதிக நன்மை அளிக்கப்படும். * இவர்களுக்கு அளவற்ற ஊதியம் உண்டு. * பொறுமை ஈமானில் பாதி. அவன் அருட்கொடைகளை வழங்கியிருக்கலாம். ஆனால் அவற்றில் அரிதாகக் கிடைப்பது இரண்டு. 1. திடநம்பிக்கை 2. பொறுமை. * பொறுமைசாலிகள் தங்களுக்குத் தவறிப்போன இரவு வணக்கத்தைப் பற்றியோ, நோன்புகளைப் பற்றியோ கவலைப்பட வேண்டியதில்லை. பொறுமையோடு செயலாற்றுவது மற்ற எல்லா செயல்களையும் விட சிறந்ததாகும். ஈமான் என்றாலே பொறுமையும் வீரமும்தான். * அவன் கொடுத்திருக்கும் நன்மையை வரம்பிட்டுக் கூறமுடியாது. அவன் ஒருவருக்கு ஏதேனும் பேரருள் ஒன்றை கொடுத்திருக்கலாம். பின்னர் அதைப் பறித்துக் கொண்டு அதற்குப் பதிலாக வேறொரு அருளை அளிக்கலாம். அப்படி அளித்தால் 'பொறுமையாக இருந்தால் அது முந்திய யாவற்றையும் விட உயர்ந்தது' ஆகும்.