தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/இனிய பதில் கூறுங்கள்

இனிய பதில் கூறுங்கள்

இனிய பதில் கூறுங்கள்


ADDED : மார் 21, 2013 05:03 PM

Google News

ADDED : மார் 21, 2013 05:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஒருவர் தர்மம் செய்கிறாரென்றால், அவர் அல்லாஹ்வின் மீது கொண்ட நல்லெண்ணத்தின் காரணமே.

* ஒருவர் கஞ்சத்தனம் செய்கிறார் என்றால் அவர் அல்லாஹ்வின் மீது கொண்ட தவறான எண்ணத்தின் காரணமேயாகும்.

* வாழ்நாளெல்லாம் கஞ்சனாக இருந்து விட்டு மரணவேளையில் கொடை வள்ளலாக மாறும் மனிதனைப் பார்த்து இறைவன் கோபம் அடைகின்றான்.

* நீங்கள் ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர். ஒருவர் மீது ஒருவர் துவேசம் கொள்ளாதீர்.

* எவரிடமும் உங்கள் தேவைகளை மறைமுகமாகச் சொல்லிக்கேளுங்கள். ஏனென்றால் ஒவ்வொன்றிற்கும் பொறாமைப்படுபவன் இருந்து கொண்டே இருக்கிறான்.

* வசதி இல்லாதவன் உங்களிடம் ஏதேனும் கேட்டால் கொஞ்சமேனும் கொடுத்து அனுப்புங்கள் அல்லது இனிய வார்த்தைகளால் பதில் சொல்லுங்கள்.

* கஞ்சத்தனத்தைப் பற்றி பயந்து கொள்ளுங்கள். ஏனென்றால் உங்கள் முன்னோர்கள் கஞ்சத்தனத்தின் காரணமாகத் தான் அழிந்து போனார்கள்.

- நபிகள் நாயகம்



Trending





      Dinamalar
      Follow us