
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஒருவன் தனது குழந்தைகளின் அல்லது தனது முதுமையான தாய், தந்தையருக்கு உதவி செய்வதற்காக செயல்புரியும் போது, அல்லாஹ்வின் பாதையில் இருக்கின்றான்.
* குற்றமற்ற பணியாளர்களின் மீது வீண்பழி சுமத்துபவன், மறுமை நாளில் சவுக்கால் அடிக்கப்படுவான்.
* கெட்டவைகளைப் பார்க்காமல் உங்கள் கண்களை கட்டுப்படுத்துங்கள். கெட்ட செயல்களை விட்டும் உங்கள் கைகளை கட்டுப்படுத்துங்கள். பொய்களை விட்டும் உண்மை பேசுவதில் முனையுங்கள்.
* குடும்பத்தினரை அலட்சியம் செய்யாதீர். சுகமான வாழ்வை இழந்து விடுவீர். அடுத்த வீட்டுக்காரரை அலட்சியம் செய்யாதீர். நற்பலனை இழந்துவிடுவீர்.
* கைப்பொருள் கைவிட்டுப் போவதற்கு முன், தான தர்மங்கள் கொடுப்பதில் விரைந்து கொள்ளுங்கள்.
* வயதும் காலமும் வீணாகும் முன், நன்மையான செயல்களைச் செய்வதில் விரைந்து கொள்ளுங்கள்.
- நபிகள் நாயகம்