
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நல்லது செய்ய வேண்டும் என்பதை கொள்கையாக ஏற்றுக்கொள். அதில் துன்பத்தை சந்தித்தாலும் பின்வாங்காதே.
* உள்ளம் உருகி வழிபட்டால், கடவுளின் அருள் எளிதில் கிடைக்கும்.
* விரும்பிய வடிவில் கடவுளை வழிபாடு செய்யலாம். அதிலும் தாயாகக் கருதுவது சிறப்பு.
* ஒரு விஷயத்தை கவுரவித்தால் அன்றி, அதன் மகத்துவத்தை உணர இயலாது.
* வாழ்வின் ஜீவநாடியான நீதியை காப்பது நம் கடமை.
* துன்பத்தை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே, சுகத்தின் அருமையை உணர இயலும்.
-ராஜாஜி