ADDED : டிச 12, 2007 10:49 PM

'நான்' என்கிற அகந்தை எல்லாச் செயல்களையும் நாமே செய்கிறோம் என்ற தவறான கருத்தை உண்டாக்குகிறது. உண்மையில் நாம் ஒரு சிறு கருவியே; கர்த்தா அல்ல. இதை உணர்ந்துவிட்டால் அகந்தை நம்மிடமிருந்து வெளியேறிவிடும்.
* எவ்வளவுக்கெவ்வளவு பணிந்து நடந்து கொள்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நன்மை உண்டு.
* பகவானுக்கு ருசி முக்கியமல்ல; அடியார்களது பக்திதான் முக்கியம்.
* நம் மனம் யாரிடம் வசப்படுகிறதோ அவரே சரியான குரு.
* பரம்பொருளைத் தொடர்ந்து விடாமல் பற்றி நிற்பதே சமாதி எனப்படும்.
* புதிய ஆசைகளை வளர்க்காதீர்கள். புதிய வாசனைகளைத் தேடிக் கொள்ளாதீர்கள். அதுவே நீங்கள் செய்திருக்கக்கூடிய தவற்றிலிருந்து மீளுவதற்கு உரிய பிராயச்சித்தம் ஆகும்.
* பிறப்பும் இறப்பும் வாழ்க்கையின் எல்லைகள். இந்த இரண்டையும் கடந்து நிற்பதே ஆன்மா. அதை உணர்ந்தால் இந்த இரண்டுமே பொருளற்றதாக ஆகிவிடும். தன்னை உணர்ந்த மனிதன் - இந்த நிலைகளைக் கடந்து விடுகிறான். இறப்பு அவனைப் பாதிப்பதில்லை.
* ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் தேடிக்கொள்ளும் நற்பலன்கள் அதிகமாக இருந்தால், அதை ஒட்டி அவனுக்கு மரணத்துக்குப் பின் இனிய அனுபவம் ஏற்படுகிறது. கெட்ட பலன்களே அதிகமாக இருந்தால் துன்பம் நிறைந்த அனுபவம் உண்டாகிறது.
* நூல்களில் மூன்றுவித தீட்சைகள் கூறப்பட்டுள்ளன. 'ஹஸ்த தீட்சை' என்பது சீடனின் சிரசைத்தொட்டு அருள் புரிதல், 'சட்ச, தீட்சை' என்பது அருட்பார்வையால் தீட்சை அளிப்பது. 'மானசீக தீட்சை' என்பது மனதினால் அருள் புரிதல். இவற்றில் மானசீக தீட்சையே அனைத்திலும் சிறந்தது.