
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மனதை முகம் பார்க்கும் கண்ணாடி போல துாய்மையானதாக வைத்துக் கொள்.
* மனம் போன போக்கெல்லாம் ஒருநாளும் போகாதே. எப்போதும் உனக்கு தெய்வ அருள் பூரணமாக இருக்கிறது.
* எல்லோரிடமும் பணிவுடன் பழகினால் அகந்தை உன்னிடம் இருந்து அகன்று விடும்.
* மனதில் அமைதி உண்டாக விரும்பினால், முதலில் நேர்மை கொண்டவனாக மாறி விடு.
* உண்மையான பக்தியை வளர்த்துக் கொள். அப்போது கெடுதல் ஏதும் கண்ணிற்கு தென்படாது.
* தீவிரமான பக்தனின் உள்ளத்தில் தெய்வம் பேசும்.
- சாந்தானந்தர்