ADDED : ஜூலை 31, 2014 05:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உலகம் முழுவதையும் அன்பினால் உங்களது சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்.
* தன்னம்பிக்கை கொண்ட மனம், தளராத மனம் என இருந்து விட்டால் எல்லாமே இருந்த மாதிரி தான்.
* கடவுளை நேசிப்பவன் புண்ணியவான். அவன் வாழ்வில் எப்போதும் துன்பம் இருக்காது.
* மனிதனுக்கு மனமே எல்லாமுமாக இருக்கிறது. அதனைச் சரிவர பாதுகாக்காவிட்டால், ஒரு நன்மையும் பெற முடியாது.
* ஒவ்வொரு நாளும் அன்றன்று செய்த நன்மை, தீமைகளை சீர்தூக்கிப் பார்ப்பது அவசியம்.
- சாரதாதேவியார்