ADDED : ஏப் 09, 2013 10:04 AM

* நாம் கடவுளிடம் இருந்து வந்தவர்கள். அதனால், கடவுளை அடையும் வரை உண்மையான மகிழ்ச்சியைப் பெற முடியாது.
* ஏமாற்றமோ, துன்பமோ நேரும் போது மனம் ஒடிந்து போகாதீர்கள். அந்த துன்பத்திலிருந்து மீள்வதற்கான முயற்சியில் துடிப்புடன் செயல்படுங்கள்.
* ஏழை மக்களிடம் அன்பு காட்டுங்கள். ஏழைகள் மீது இரக்கம் கொள்ளுங்கள். அவர்களின் உடல்நலமும், மனபலமும் உயர்வதற்குரிய பணிகளில் ஈடுபடுங்கள்.
* குறைவான சுமை இருந்தால் ரயில் பயணம் நிறைவான சுகத்தை தரும். அதுபோல, ஆசையைக் குறைத்துக் கொண்டால் நிம்மதி நிலைக்கும்.
* குற்றங்குறை இல்லாத மனிதன் யாருமில்லை. துன்பக் கலப்பு இல்லாத இன்பமும் உலகில் இல்லை. அதனால் பற்றற்ற தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
* தடைகளைச் சந்திக்க நேர்ந்தால் தைரியத்துடன் எதிர்கொள்ளுங்கள். அவை உங்களை இறுக வைத்து உறுதித் தன்மையை கொடுக்க வல்லது.
- சாய்பாபா