ADDED : மார் 20, 2014 12:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* சத்தியம், தர்மம் இரண்டும் நம் கண்கள். இந்த இரண்டையும் காத்து வந்தால் வாழ்வில் அமைதி நிலைக்கும்.
* பிரார்த்தனை என்பது உள்ளம் சார்ந்து இருக்க வேண்டும். உதட்டளவில் இருந்தால், அதனால் பயன் உண்டாகாது.
* கடவுளைக் காண சிரமப்பட்டு எங்கும் தேடி அலைய வேண்டியதில்லை. எங்கும் அவர் நிறைந்திருக்கிறார்.
* வாழ்வில் யாருக்கும் பயப்படவோ அல்லது யாரையும் பயமுறுத்தவோ கூடாது.
* எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒன்றுக்கொன்று எதிராக இல்லாமல் நேர்கோட்டில் இருத்தல் அவசியம்.
- சாய்பாபா