sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

ஆன்மிகம்

ஆன்மிக சிந்தனைகள்

சத்யசாய்

எல்லாம் ஆண்டவன் சித்தம்

எல்லாம் ஆண்டவன் சித்தம்

எல்லாம் ஆண்டவன் சித்தம்

எல்லாம் ஆண்டவன் சித்தம்

ADDED : ஜன 15, 2009 10:57 AM

Google News

ADDED : ஜன 15, 2009 10:57 AM

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நாம் ஒவ்வொருவரும் இரண்டு செயல்களை அவசியம் மறந்து விட வேண்டும். ஒன்று நாம் பிறருக்குச் செய்த உதவி; மற்றொன்று பிறர் நமக்குச் செய்த தீங்கு. இதனால், நமக்கும், நம்மைச் சார்ந்த சமுதாயத்திற்கும் நன்மை செய்தவர்கள் ஆகிறோம்.
* இயற்கை நமக்குப் புகட்டும் பாடம் நாம் பிறருக்காக வாழ வேண்டும் என்பதே. நம் வாழ்வின் ஒட்டு மொத்த பயனே நாம் மற்றவர்களுக்கு எப்படி பயனுள்ளவர்களாக வாழ்கிறோம் என்பதில் தான் அடங்கி இருக்கிறது.
* கடவுளைச் சரணாகதி அடைந்தவர்கள் செய்கின்ற செயல்களை கடவுளுக்கு அர்ப்பணித்து விட்டு, பலனைப் பற்றி எதிர்பார்த்தல் கூடாது. எல்லாம் ஆண்டவன் சித்தப்படி நடக்கும் என்ற உறுதியோடு இருக்க வேண்டும்.
* ஒரு மனிதனை உருவாக்குவது அவனுடைய மனம் தான். மனம் ஒரு லென்ஸ். உடல் என்பது அந்த லென்சைத் தாங்கி நிற்கும் கேமரா போலத்தான். கேமரா கொண்டு நல்ல படங்களை எடுக்கவே முயற்சிக்க வேண்டும்.
* நம் உடம்பே இறைவன் இருக்கும் கோவில். மனத்தூய்மையும், சுயகட்டுப்பாடும் கொண்டவன் உள்ளத்தில் இறைவன் விருப்பத்துடன் கோவில் கொள்கிறான்.

Trending

Dinamalar
Follow us