ADDED : நவ 18, 2013 11:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பறவை உயரமாக பறந்தாலும், முடிவில் மரக்கிளையில் அமர்ந்து தான் ஓய்வெடுக்கும். அதுபோல, கற்றவர்கள் எவ்வளவு அறிவு பெற்றிருந்தாலும், இறைவனை வணங்கினால் தான் அமைதி பெற முடியும்.
* தளராத நம்பிக்கை, தெய்வ சிந்தனை, சகிப்புத்தன்மை ஆகிய குணங்களை வளர்த்துக் கொண்டு வாழ்வைப் புனிதமாக்குங்கள்.
* பிறருடைய கருத்துக்கு மதிப்பு கொடுங்கள். மற்றவர்களின் அந்தரங்க விஷயங்களில் குறுக்கிடாமல் இருப்பதும் மேலான பண்பு.
* குடும்பம் என்பது சமூகத்தின் சிறுபகுதி. அதை முதலில் ஒழுங்குபடுத்துங்கள். குடும்பத்தை சீராக்கி விட்டால், சமூகமும் சீராகி விடும்.
* தீயவர்களையும் நல்வழிப்படுத்தவே கடவுள் முயல்கிறார். அனுபவத்தால் கிடைக்கும் பாடத்தை ஏற்று, அவர்களும் மனம் திருந்த வேண்டும்.
- சாய்பாபா