sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

அழுதால் அவனருள் பெறலாம்

/

அழுதால் அவனருள் பெறலாம்

அழுதால் அவனருள் பெறலாம்

அழுதால் அவனருள் பெறலாம்


ADDED : மே 15, 2011 09:05 AM

Google News

ADDED : மே 15, 2011 09:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பிறக்கும் போது நாம் அழுது, இறக்கும் போது பிறரை அழ வைக்கிறோம், அழுகையொடு பிறந்து, அழுகையோடு மறையும் நாம், இறைவனை நினைத்து சற்று அழ வேண்டும். கண்ணீர் மல்க வேண்டும்.

* நாக்கில் சர்க்கரை இருக்கும் வரை இனிப்பு இருக்கும். அதைப்போல இருதயத்தில் அன்பு, அமைதி, பக்தி இருக்குமானால் ஆனந்தத்தை உணர முடியும்.

* மனிதனின் அறியாமையை பக்தியினால் அழிக்கலாம். மனித சேவை மகேசனின் சேவை என்று கருதிச் செய்தால் அறியாமையின் ஆழத்தை நாம் கண்டறியலாம்.

* செயற்கைக்கோளை உருவாக்கிய விஞ்ஞானியைப் பாராட்டும் நாம், இயற்கைக்கோளை உருவாக்கிய இறைவனையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

* இயற்கையை உணர்வதற்காக அறிவும், இறைவனின் புகழைப்பாட வாயும், இறைவனின் பாடல்களை கேட்க காதும், பிறருக்கு உதவுவதற்காக உடம்பையும் இறைவன் படைத்துள்ளான்.

* இறைவனால் அளிக்கப்பட்ட உடலை நன்கு பராமரிக்க வேண்டும். அழுக்கு, நோய், வருத்தம், தோல்வி மனப்பான்மை ஆகியவற்றால் பாதிக்கப்படாமல் பாதுகாக்க வேண்டும்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us