
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கடவுள் எங்கோ கண் காணாமல் இருப்பதாக மனிதன் கருதுகிறான். உண்மையில் நம் இதயக் கோவிலே அவரின் இருப்பிடம்.
* குறுகிய மனப்பான்மை கொண்டவன் விலங்கு நிலைக்கு தாழ்கிறான். பரந்த மனம் உள்ளவன் தெய்வ நிலைக்கு உயர்கிறான்.
* தாயின் அன்பும், தியாகமும் இல்லாவிட்டால் உலகில் நம்மால் வாழவே முடியாது. பெற்ற தாயிடம் நன்றி செலுத்துவது நம் கடமை.
* நமக்கு எது வேண்டுமோ அதை கடவுளிடம் கேட்பதில் தவறில்லை. ஆனால், அதற்கான தகுதி நம்மிடம் இருக்க வேண்டும்.
- சாய்பாபா